அன்புதான் அரிந்ததா?

naani

கனிந்த கண்மலர் நாணி நடுங்க
சிவந்த செங்கைகள் கண்களைக் கவர

நிலவின் நிழலில் குளிர்ந்த காற்றில்
தனித்து தவிக்கும் கண்ணே கரும்பே.

உனக்கு உயிர் தந்த தாயுமொருவள்
உண்டோ உருகமுதே? – கண்மை கரையுதடி !

மையிட்டு மெருகேற்றியிருக்கிறாள், பொட்டிட்டு பொலிவூட்டியுள்ளாள்
கண்டும் காணாமல் இருந்திடவா இவள்

தொப்புள்கோடி தொலைத்தாள், பத்துமாதம் பயந்தாள்?

வறுமைதான் வளர்ந்ததா? அன்புதான் அரிந்ததா?

~ by arunjawar on May 4, 2009.

2 Responses to “அன்புதான் அரிந்ததா?”

  1. அனாதைக் குழந்தை பற்றி இதை விட சிறப்பாக யாரும் எழுதியதில்லை.ஒருவள் என்பது தமிழ் இலக்கணம் ஒப்புக்கொள்ளாத சொல். ஒருத்தி என்பதே சரி.

    http://kgjawarlal.wordpress.com
    kgjawarlal@yahoo.com

  2. கருத்துக்கு நன்றி. மனுஷி, மனிதம் வரிசையில், யாம் கண்டுபிடித்த ஒரு வார்த்தை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இக்கருத்தை மனதில் இருத்திவிட்டோம், நன்றிகள்.

Leave a Reply